Categories
அரசியல்

ப்ரோ கபடி லீக் 2022…… தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறுமா….?? களமிறங்கும் முக்கிய புள்ளி….!!!

தமிழ் தலைவாஸ் அணி ப்ரோ கபடி லீக் வரலாற்றில் மிகவும் குறைந்த அளவிலேயே வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாவது சீசனில் லீக்கில் இணைந்த தமிழ் தலைவாஸ் அணி ஒருமுறை கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை. தமிழ் தலைவாஸ் அணி 22 ஆட்டங்களில் 5 புள்ளிகளில் வெற்றி அடைந்து பட்டியலில் 11-வது இடத்தை பிடித்தது. ஆனால் 6 போட்டிகள் டையில் முடிந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதில் அணி வெற்றி பெற்றிருந்தால் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி ஏமாற்றத்தை அளித்தது. இதனால் அணியின் கேப்டன் சுர்ஜித் சிங் மற்றும் நட்சத்திர ரைடர்களான கே.பிரபஞ்சன் மற்றும் மஞ்சித் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ப்ரோ கபடி 2022 லீக்கில் டாப் ரைடர் பவன் செஹ்ராவத்தை ஏலத்தில் எடுத்துள்ளனர். இந்த ஆண்டில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. அதாவது கடந்த 3 சீசன்களில் செஹ்ராவத் தனது முழு திறனையும் ஆட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ப்ரோ கபடி லீக்கின் 6, 7, 8 ஆகிய சீசன்களில் பவன் செஹ்ராவத் நம்பர் ஒன் ரைடராக இருந்துள்ளார். மூத்த தேசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய ரயில்வே கேப்டனாகவும் பவன் செஹ்ராவத் சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் தமிழ் தலைவாஸ் பவன் செஹ்ராவத்தை அணியின் கேப்டனாக நியமித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் வெளிப்படுத்திய முழு திறமையையும் இந்த ஆண்டு ஆட்டத்தில் பவன் வெளிப்படுத்தினால் சென்னையைத் தேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி ப்ரோ கபடி லீக் 2022 கோப்பையை கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Categories

Tech |