இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரனா பரவல் காரணமாக ப்ரோ கபடி நடைபெறாமல் இருந்தது இந்நிலையில் புரோ கபடி இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதன்படி 12 அணிகள் களமிறங்கும் 9 வது புரோ கபடி லீக் போட்டிகள் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூர், புனேஸ மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் வீரர்களை படு பயங்கரமாக தயார் செய்து வருகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு புரோ கபடி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனுக்கான முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யு மும்பா அணிகள் களம் இறங்க உள்ளனர். இதனையடுத்து வருகின்ற 7 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காந்தீரா வாவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அரங்கேற உள்ளது. இந்த இரு அணிகளுமே இதற்கு முன்னர் நடைபெற்ற சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புரோ கபடி சீசனுக்கான முதல் போட்டியே அனல் பறக்கும் என்று தான் தெரிகிறது.