8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது.
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இது நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அனிகன் மோதின. இதில் 45-26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி 3-வது வெற்றியை ருசித்தது. இதை தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதின.
இப்போட்டியில் 30-28 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது. இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-மும்பை அணியும். இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.