புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் – குஜராத் அணிகள் மோதுகின்றது.
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும் .லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே -ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் .இதில் முதல் நாளான நேற்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் யு மும்பா அணி 46-30 என்ற கணக்கில் பெங்களூர் புல்சை தோற்கடித்தது .
இதைதொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதியது .இப்போட்டி40-40 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது .இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் – குஜராத் அணிகள் மோதுகின்றன .அதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு நடைபெறும் மற்றும் ஆட்டத்தில் டெல்லி- புனே அணிகளும், 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா – ஹரியான அணிகளும் மோதுகின்றன.