Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :மும்பை மற்றும் பாட்னா அணிகள் அசத்தல் வெற்றி…..!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை, பாட்னா அணிகள் வெற்றி பெற்றது.

12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் யு மும்பா – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் 48-38 என்ற கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி 3 வெற்றி, 3 டிரா, 1 தோல்வி என புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

இதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ்- குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பாட்னா அணி 27 – 26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாட்னா அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது.

Categories

Tech |