8-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.
12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- யு மும்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் 37-28 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணி வெற்றி பெற்றது .இதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்- பெங்களூர் புல்ஸ்அணிகள் மோதியது. இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி 42-28 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 1 தோல்வி , 2 டிராவை சந்தித்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.