Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : பாட்னா, டெல்லி அணிகள் …. இறுதிப்போட்டிக்கு தகுதி ….!!!

12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களைப் பிடித்த பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோதா, குஜராத்  ஜெயண்ட்ஸ், பெங்களூர் புல்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள்  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.இதில் எலிமினேட்டர் சுற்று முடிவில் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா, தபாங் டெல்லி மற்றும்  பெங்களூரு புல்ஸ் அணிகள் அரையிறுதி முன்னேறின.
இதனிடையே நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், உ.பி. யோதா அணியும் மோதின. இதில்  38 – 27 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற பாட்னா அணி  இறுதிக்கு முன்னேறியது.இதைதொடர்ந்து நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி – பெங்களூர்  புல்ஸ் அணிகள் மோதின. இதில் அதிரடியாக விளையாடிய டெல்லி அணி 40 -35 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று  இறுதிக்கு முன்னேறியது. இதனிடையே நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் – தபாங் டெல்லி ஆகிய அணிகள் மோதுகின்றன.

Categories

Tech |