8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களுரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி – பாட்னா பைரட்ஸ் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 26-23 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது. மேலும் புள்ளிகள் பட்டியலில் 81 புள்ளிகளுடன் பாட்னா பைரட்ஸ் அணி முதலிடத்திலும், 70 புள்ளிகளுடன் தபாங் டெல்லி அணி 2-வது இடத்திலும் உள்ளது.
இதனிடையே இன்று இரவு நடைபெறும் ஆட்டங்களில் புனேரி பால்டன்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி) அணியும், தெலுங்கு டைட்டன்ஸ்- தபாங் டெல்லி (இரவு 8.30 மணி)அணியும் , தமிழ் தலைவாஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் (இரவு 9.30 மணி) அணியும் மோதுகின்றன.