புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி ,புனேரி பால்டனை வீழ்த்தியது .
12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது .லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – புனேரி பால்டன் அணிகள் மோதின .
இதில் 38-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணி வெற்றி பெற்றது .இதையடுத்து நடந்த மற்றொரு போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ஹரியானா அணி வெற்றி பெற்றது.