Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :புனேரி பால்டனை வீழ்த்தி ….முதல் வெற்றியை ருசித்தது தமிழ் தலைவாஸ் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது .

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் –  புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால்  முதல் பாதி ஆட்டத்தில் 18-11 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையில் இருந்தது.இதன் பிறகு அடுத்தடுத்து புள்ளிகளை சேகரித்த புனே அணி  17-18 என்று நெருங்கியது .

இதனை சுதாரித்துக்கொண்டு தமிழ் தலைவாஸ் அணி மேலும் புள்ளிகளை குவித்து இறுதியாக     36-26  என்ற புள்ளி கணக்கில் புனே அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது .இதையடுத்து இன்று இரவு 7.30  மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் யு மும்பா- உ.பி. யோத்தா அணியும் ,இரவு 8.30 மணிக்கு நடைபெறும்  ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் ,இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி – தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன.

Categories

Tech |