Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் VS பாட்னா பைரேட்ஸ் மோதிய ஆட்டம் ….டிராவில் முடிந்தது ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது .

12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் 18-12 என்ற கணக்கில் பாட்னா அணி முன்னிலையில் இருந்தது. இதனை சுதாரித்துக்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 2-வது பாதி ஆட்டத்தில் புள்ளிகளை குவித்தது.இறுதியில் இரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் 30- 30 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

இதுவரை தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி,  4 டிரா என 22 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதைதொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி 38 – 31 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி        5-வது வெற்றியை பதிவு செய்தது.

Categories

Tech |