Categories
உலக செய்திகள்

“பிரான்சுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த ஆஸ்திரேலியா!”.. பிரான்ஸ் அரசின் முடிவு..!!

பிரான்ஸ் அரசாங்கம், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து தங்களின் தூதர்களை திரும்பப்பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சேர்ந்து இந்தோ-பசிபிக் பகுதிக்கு புதிதாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டமைப்பை (AUKUS) உருவாக்கியிருக்கிறது.  அதாவது இந்த மூன்று நாடுகளும், இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த கூட்டமைப்பை உருவாக்கியதாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2016-ஆம் வருடத்தில், ஆஸ்திரேலியா, பிரான்சிடம், 12 நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு, 66 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்திருந்தது.  எனினும், தற்போது உருவான இந்த புதிய கூட்டணியில், அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாட்டிற்கு, அணு ஆயுதம் ஏவக்கூடிய 8 நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அளிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இந்த புதிய ஒப்பந்தத்தினால், ஆஸ்திரேலிய அரசு, பிரான்சுடன் செய்த 12 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கக்கூடிய பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. எனவே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு உள்ள உறவில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், பிரான்ஸ் அரசு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளிலிருந்து, தங்கள் தூதர்களை திரும்பப்பெற்றுவிட்டது.
தங்களுடனான, ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்துவிட்டு, அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தத்தை செய்ததால், பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

Categories

Tech |