பிரிட்டன் அரசாங்கம் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை எனில் ஈஸ்டர் இந்த தடவை கடுமையானதாக இருக்கும் என்று NHS தலைவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் NHS தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள். மக்கள் அதிகம் கூடியிருக்கும் பகுதிகளில் கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும். பலர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடும் தனிப்பட்ட விருந்து கேளிக்கைகள் தடுக்கப்படவேண்டும்.
கொரோனா விதிமுறைகளை பிரிட்டன் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அப்படி கட்டுப்பாடுகளை விரைவில் நடைமுறைப்படுத்தினால் தான் ஈஸ்டர் வாரத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடியை சமாளிக்க முடியும் என்று NHS தலைவர்கள் கூறியுள்ளனர். விரைவில் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டும் தான் தொற்று மேலும் தீவிரமாவதை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.