இங்கிலாந்தில் உதட்டை அழகாக்க நினைத்து பில்லர் உபயோகித்த பெண்ணின் உதடுகள் ஆறு மடங்கு பெரிதாகி பேசுவதற்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் இருக்கும் செஸ்டர் நகரத்தை சேர்ந்த லாரன் ஈவென்ஸ் என்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தன் உதடுகளை அழகாக்க விரும்பியிருக்கிறார். எனவே, உதடுகளை சிறிது பெரிதாக்க போடப்படும் ஊசியை பயன்படுத்தியிருக்கிறார்.
அதற்கு பெயர் பில்லர். இந்த ஊசி போட்ட பின் சிறிது நேரத்திற்கு வலி இருக்கும். மேலும் அது ஒரு சிலருக்கு மட்டும் தான் ஒத்துக்கொள்ளும். சில பேருக்கு அலர்ஜி ஏற்பட்டுவிடும். எனவே ஒவ்வாமை உள்ளவர்கள் அதை உபயோகிக்கக் கூடாது. ஆனால் இதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் லாரன் பில்லரை பயன்படுத்தி விட்டார்.
அவருக்கு, சிறிது நேரத்தில் உதடுகள் இயல்பாக இருப்பதிலிருந்து அதிகமாக பெருத்து விட்டது. எனவே, மருத்துவரை அணுகியுள்ளார். ஆனால் அவரால் பேச முடியாமல் போனது. மேலும் சுவாச பகுதிகளில் நெருக்கம் ஏற்பட்டு சுவாசிக்க சிரமப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உதடு வீக்கத்தை குறைக்க ஆன்டிஹிஸ்டமைன் செலுத்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து லாரன் கூறுகையில், என் உதடு தற்போது 6 மடங்கு பெரிதாகி விட்டது. அதிகமான வலி ஏற்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் உதடு பெரிதாகிக்கொண்டே இருக்கிறது. அது தான் பயமாகவுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், இன்னும் சிறிது காலத்திற்கு இந்த லிப் பில்லரை உபகோகிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.