இங்கிலாந்தில் பிரதமருக்கு நெருக்கடி உண்டாகும் விதமாக, அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் தொடர்ந்து பதவி விலகியிருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வெல்லா பிரேவர்மென் என்ற பெண், உள்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே நேற்று இரவு அவர் தான் தவறு செய்ததாகவும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறியதாகவும் தெரிவித்து பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
கடந்த 14ஆம் தேதி அன்று நிதி மந்திரியான குவாசி வார்தெங்கை நீக்கிவிட்டு ஜெரேமி ஹன்ட்-ஐ அமைச்சரவையில் நியமித்தனர். ஒரே வாரத்தில் இரண்டு மந்திரிகள் பதவியிலிருந்து விலகி உள்ளனர். இந்நிலையில், அரசாங்கத்தின் தலைமை பொறுப்பில் இருந்த வெண்டி மோர்ட்டனும், துணை கொறடா கிரெய்க் விட்டேக்கரும் பதவி விலகியது, பிரதமருக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது. மேலும், அவர்கள் பதவியில் தான் இருப்பார்கள் என்றும் கூறப்படுவதால் குழப்பம் நீடிக்கிறது.