அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் விமான நிலையத்தில் ஒருவர் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது தன் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் 74 வயது நபர் Wegal Rosen. இவர் கனடா செல்வதற்காக Fort Lauderdale என்ற விமான நிலையத்தில் பிற பயணிகளுடன் வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென்று தன் பையில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிந்தனர்.
அங்கிருந்த மக்களை பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்திற்கு வரும் போக்குவரத்திற்கும் தடை விதித்தனர். 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 50 விமானங்கள் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது. அதன் பின்பு அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து பாதுகாப்பாக அந்த பையை சோதனையிட்டனர். ஆனால் அதில் CPAP எனும் மருத்துவ உபகரணம் இருந்தது. அதாவது Wegal Rosenக்கு sleep apnea என்ற பிரச்சனை இருக்கிறது. அதாவது உறங்கும் சமயத்தில் அவரால் சரியாக மூச்சுவிட முடியாது. எனவே அதற்காக சிகிச்சை பெற CPAP என்ற மருத்துவ கருவியை வைத்திருக்கிறார்.
அதாவது, அவரின் உடமைகள் அனைத்தையும் சோதனையிட அதிக தொகை செலுத்த வேண்டியிருந்தது. மேலும் அவர் கனடாவிற்கு இதய நோய் நிபுணரை சந்திப்பதற்காக செல்லவிருக்கிறார். எனவே அதற்கு தாமதம் ஏற்பட, மனம் நொந்து போன Rosen கோபத்தில், தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டார்.
இதனால் விமான நிலையமே களேபரமானது. அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 15 வருடங்கள் தண்டனை விதிக்கப்படும். மேலும் 10,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்க நேரிடும். எனினும் நீதிபதி, 20,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தக்கூறி ஜாமீனில் விடுவித்தார். ஆனால் இனிமேல் அவர் மீண்டும் அந்த விமான நிலையத்தில் ரொரன்றோ செல்லக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்!..