அசைவ உணவுகள் செரிமானம் அடைய செய்ய வேண்டியவை..
அசைவம் சாப்பிடும் போது , மிதமான வெந்நீரை பருகினால் உணவு செரிப்பது எளிமையாகிறது. குளிர்ந்த நீர் குடித்தால் உணவில் கலந்துள்ள எண்ணெய்யை இறுக செய்து செரிமான பிரச்சனையை உருவாக்கும் .
அசைவ உணவு செரிக்காமல், அவதிப்படும் போது, சீரக தண்ணீர் குடித்தால், செரிமானம் எளிமையாக நடக்கும்.
வாழைப்பழத்தில் அதிகளவு இன்சுலின் இருக்கும். எனவே இது நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது உணவுக்குழாயில் அதிகளவு அமிலங்கள் படிவதை தடுத்து நெஞ்செரிச்சலையும், செரிமான பிரச்சனைகளையும் தடுக்கிறது .
சாப்பிட்ட பின்னர், கிரீன் டீ அருந்துவதால், செரிமானம் சீராகும் . ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ அருந்தினால் நல்லது .