சினிமா தயாரிப்பாளர் அன்புசெழியன், தன் மகள் திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.
திரைப்பட தயாரிப்பாளர், பைனான்சியர், திரையரங்கின் உரிமையாளர், விநியோகஸ்தர் என்று பல்வேறு துறைகளில் பிரபலமடைந்திருக்கும் அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவிற்கு வரும் பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று சென்னையில் இருக்கும் திருவான்மியூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடக்கவிருக்கிறது.
இந்நிலையில், அன்புச்செழியன் இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ-வான நடிகர் உதயநிதி ஸ்டாலின் இருவரையும் நேரில் சென்று சந்தித்து, திருமண அழைப்பிதழ் கொடுத்து, திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.