ஜென்டில்மேன்-2 திரைப்படத்தின் தயாரிப்பாளர், அப்படத்தின் இசையமைப்பாளர் யார்? என்று சரியாக கணித்துக் கூறினால் தங்ககாசு பரிசு என்று அறிவித்திருக்கிறார்.
பிரமாண்ட இயக்குனர் சங்கர் கடந்த 1993 ஆம் வருடத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.
இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. தன் முதல் திரைப்படத்திலேயே இயக்குனர் சங்கர் அதிக வரவேற்பை பெற்றார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் வருடத்தில், ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாக கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு வெளியிட்டார்.
Guess the legend musician of Indian cinema who will be the Music Director of Mega Producer @KT_Kunjumon‘s #Gentleman2 ?
Send in your responses with the hashtag #G2MusicDirector
Lucky 3 winners will be rewarded GOLD coin✔️ each.Stay Connected!#GentlemanFilmInternational pic.twitter.com/K65lUREHju
— C K Ajaykumar,PRO (@ajay_64403) January 22, 2022
ஆனால் அதன்பிறகு இத்திரைப்படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் யார் இசையமைப்பாளராக இருப்பார்? என்று சரியாக கணித்து கூறும் முதல் மூவருக்கு தங்கக்காசு பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். பலரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரையே கூறியுள்ளனர்.