மேலும் இப்படத்தில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் உரிமையை பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தனது ஸ்ரீ ராஜலெட்சுமி பிலிம்ஸ் மூலம் கைப்பற்றியுள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 19ந்தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
Categories