Categories
சினிமா

பள்ளி சீருடையில் முத்தக்காட்சியா….? தயாரிப்பாளர்கள் ட்விட்டரில் மோதல்…!!!

பள்ளிக்கூட சீருடையில் முத்தக் காட்சி இருக்கும் போஸ்டர் தொடர்பில் ட்விட்டரில் தயாரிப்பாளர்கள் இருவர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இயக்குனர் தர்புகா சிவா இயக்கியிருக்கும், “முதல் நீ முடிவும் நீ” என்னும் திரைப்படத்தை சமீர் பாரத் ராம் தயாரித்திருக்கிறார். பள்ளி பருவத்தில் நடக்கும் நிகழ்வுகளை குறிக்கும்  இத்திரைப்படம் இன்று OTT  தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது.

அதில், கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் பள்ளிச்சீருடையில் முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. இதற்கு, இந்த மத கட்சி நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக இருக்கும் எஸ்.கே கோபி, ட்விட்டர் பக்கத்தில், பள்ளி சீருடை அணிந்து கொண்டு இது போன்ற காட்சி வெளியாவது நல்லதா? இல்லை கெட்டதா? என்று கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த கார்த்திக் ரவிவர்மா என்ற தயாரிப்பாளர், போஸ்டரை மட்டும் பார்த்துவிட்டு விவாதிப்பதை காட்டிலும் திரைப்படத்தை பார்த்த விட்டு விவாதிக்கலாம். அப்படி பார்த்தால், கதாநாயகன் கையில் கத்தி, அரிவாள் இருக்கும் போஸ்டரும் வரக்கூடாது. திரைப்படத்தில் காதல் திருமணம் செய்யக்கூடாது. வில்லன் கதாப்பாத்திரம், இந்து, கிறிஸ்டியன் மற்றும் முஸ்லிம் போன்ற எந்த மதத்தை சேர்ந்தவர் என்றும் கூறக்கூடாது. மொத்தத்தில் திரைப்படத்திற்கு என்று புதிதாக மனு தர்மம் தான் எழுதப்படவேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |