Categories
உலக செய்திகள்

அவர் சொல்றாருன்னு… எங்க தயாரிப்ப குடிச்சிறாதீங்க… தயாரிப்பாளர்கள் வேண்டுகோள்.!

லைசால் (lysol) மற்றும் டெட்டால் (dettol) தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளைக் குடிக்கவோ அல்லது உடலில் ஊசி மூலம் செலுத்தி கொள்ள வோ வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். குறிப்பாக அமெரிக்கா கொரோனாவின்  பிடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், லைசால் அல்லது டெட்டால் போன்ற கிருமி நாசினிகளை உடலுக்குள் செலுத்திக் கொள்வதன் மூலமாக கொரோனாவில் இருந்து விடுபட முடியுமா என்பதை சோதித்துப் பார்ப்பது தொடர்பான ஆர்வம் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது, ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டு கிருமிநாசினிகளை நோயாளிகளின் உடலில் செலுத்தி என்னதான் நடக்கிறது என கண்டறிய முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்றார்.

டிரம்ப் பேசியதை தொடர்ந்து, எங்கள் தயாரிப்புகள் எந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டதோ  அதற்காக மட்டும் தான். அதுவும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தயாரிப்பின் மீது கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று லைசால் & டெட்டால் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்..

மேலும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, தங்களிடம் லைசால் அல்லது டெட்டால் போன்ற கிருமி நாசினிகளை உடலுக்குள் செலுத்தி கொள்வது பயனளிக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருவதாக லைசால் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.. அதற்கு பதிலளிக்கும் விதமாக எக்காரணம் கொண்டும் தங்கள் தயாரிப்புகளை யாரும் சாப்பிடக்கூடாது என்று லைசால் மற்றும் டெட்டால்  தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Categories

Tech |