Categories
சினிமா தமிழ் சினிமா

உணவின்றி தவித்து வருபவர்களுக்கு உதவும் தயாரிப்பு நிறுவனம்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

உணவின்றி தவித்து வருபவர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று உதவி வருகிறது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர். ஆகையால் அவர்களுக்கு உதவும் வகையில் பல திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வைக்கின்றனர்.

அந்த வகையில் டிஸ்கவர் ஸ்டுடியோ பிலிம்ஸ் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இசை அமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷ் சாலையோரம் வசித்து வரும் 100 ஏழைகளுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கிவருகிறார். இந்நிறுவனம் தற்போது பிரபல காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் இளம் நடிகர் மாஸ்டர் தினேஷ் படங்களை இயக்கி வருகிறது.

Categories

Tech |