Categories
உலக செய்திகள்

விலை உயர்ந்த CO2…. பிரித்தானியா அரசின் அதிரடி நடவடிக்கை…. தகவல் வெளியிட்ட வணிக செயலாளர்….!!

இன்னும் சில நாட்களில் உணவுத் தட்டுப்பாட்டிற்கும் விலை ஏற்றத்திற்கும் முடிவு காண நடவடிக்கைகளை எடுப்பதாக பிரித்தானியா அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானியா நாட்டில்  எரிவாயு மற்றும் கார்பன் டை ஆக்சைடு தட்டுப்பாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார்பன் டை ஆக்சைடானது  உணவுக்காக விலங்குகளை    கொள்ளும் முன்பு  மயக்க அடைய செய்யவும் மற்றும் உணவுகள் கெடாமல் பாதுகாக்கவும் பயன்படுத்தபடுகின்றது. உலக முழுவதும் COVID-19 நோய் தொற்றிலிருந்து மீண்டு வருகிறது. இதனால் பிரித்தானியாவில் இந்த ஆண்டு எரிசக்தி தேவையானது 3 மடங்காக  உயர்ந்துள்ளது .

குறிப்பாக எரிவாயு விலையேற்றத்தினால் பிரித்தானியாவிற்கு தேவையான 60 சதவீதம் கார்பன் டை ஆக்சைடை  உற்பத்தி செய்யும் 2 உர தொழிற்சாலைகள் தற்காலிகமாக  அடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகதான் பிரித்தானியாவில் தற்போது  உணவு தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் CO2 உற்பத்தியை உயர்த்த பிரித்தானியா அரசு மிகுந்த பொருட்செலவில் அதிரடி நடவடிக்கைகள்  எடுத்து வருவதாக அந்நாட்டின் வணிக செயலாளர் குவாசி குவார்டெங் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பிரச்சனைக்கு இன்னும் சில நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் கார்பன் டை ஆக்ஸைடு விநியோகத்தை அதிகரிக்கவும் CF உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தி  மானியம் வழங்குவது போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து பிரித்தானிய அரசு விவாதித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை அனைத்தும்  மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவழிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |