Categories
தேசிய செய்திகள்

“உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி”….. உலகின் டாப் 5 பட்டியலில் இடம் பெற்ற இந்தியா…. ‌ மத்திய அமைச்சர் பெருமிதம்….!!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஒன்றில் ஒருங்கிணைந்த உபகரணங்கள் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளின் முன் உரையாற்றினார். அவர் பேசியதாவது, சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் தான் செயற்கை இதய வால்வு, ஆக்சிஜனேட்டர் உள்ளிட்ட சில இயந்திரங்கள் உருவாக்கப்படுகிறது. இந்த 4 நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. ‌ இதனால் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் உள்ள டாப் 5 நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

இந்த உபகரணங்களின் விலையானது மற்ற நாடுகளை விட மூன்றில் ஒரு பங்கு விலையில் தான் இந்தியாவில் இருக்கிறது. அதன் பிறகு உலக தரத்திலான உள்நாட்டு உற்பத்தி உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு முதல் நான்கில் ஒரு பங்கு விலையில் தான் நோயாளிகளுக்கு உபகரணங்கள் இங்கு கிடைக்கப் பெறுகிறது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பார் தொலைநோக்கு திட்டம் தான்‌. மேலும் உலக நாடுகளின் மத்தியில் தற்போது மருத்துவ மேலாண்மையில் சுயசார்பை பிரதிபலிக்கும் நாடாக இந்தியாவும் மாறியுள்ளது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |