மாநிலங்களுக்கு இடையே தொழில்முறை பயண போக்குவரத்துக்கு தடை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அண்டை மாநிலங்களுக்கு தொழில் ரீதியாக செல்வோர் 48 மணிநேரத்தில் திரும்பினால் பரிசோதனை தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு தொழில் முறை பயணங்களுக்கு தடை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த சமயத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும் மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை 48,019 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழப்புகள் 5,00-ஐ தாண்டியுள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொழில் ரீதியாக வெளி மாநிலங்களுக்கு செல்ல தற்போது தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.