Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேராசிரியர் செய்யுற வேலையா இது…? கரெக்டா கண்டுபிடிச்சிடாங்க…. CCTV கேமராவால் வெளிவந்த உண்மை…!!

கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீஸ்காரர் ரமணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான புகாரின்படி மத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அதில் மோட்டார் சைக்கிள்களை 2 பேர் திருடி சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர்கள் அனுமன் தீர்த்தம் பகுதியில் வசித்துவரும் தணிகாசலம் என்பதும் மற்றொருவர் வெங்கடேசன் என்பதும் தெரியவந்துள்ளது.

இதில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தணிகாசலம் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |