மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் டென்சிங் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் தேசிய மாணவர் படையையும் இவர் கவனித்து வந்துள்ளார். இந்த தேசிய மாணவர் படையில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த மாணவியும் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் டென்சிங் பாலையா தேசிய மாணவர் படை தொடர்பாக பயிற்சிக்கு சென்ற இடங்கள் உட்பட பல்வேறு இடங்களில் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டென்சிங் பாலையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.