மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின் மேரி தம்பதியர் கோவிலுக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அருப்புக்கோட்டை அருகே வந்துபோது, காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் ஜோஸ்மின்மேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோஸ்மின்மேரி ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை ஆவார். படுகாயமடைந்த ஜோஸ்மின்மேரியின் கணவர் ஞானராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.