கள்ளக்காதல் காரணத்தால் பேராசிரியர் ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் பகுதியில் அனிதா என்பவர் வசித்த வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9ஆம் தேதி அவரின் வீட்டின் முன்புறத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட அனிதாவின் உடலை பரிசோதித்த மருத்துவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால் இன்மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் இம்மாவட்டத்தில் உள்ள நாயகன்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி கூடத்தில உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் சுதாகர் என்பவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அப்போது இறந்து போன பேராசிரியர் அனிதாவும், உடற்கல்வி ஆசிரியர் சுதாகரும் இப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பணியாற்றும் போது பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது என அவர் கூறியுள்ளார்.
அதன்பின் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் சுதாகருக்கு அனிதா தவிர வேறொரு தனியார் பள்ளி ஆசிரியருடனும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரியவந்துள்ளது. பின்னர் இதுபற்றி சுதாகரிடம் அனிதா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை வற்புறுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் கோபமடைந்த சுதாகர் தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தினால் அனிதாவின் மார்பகம் மற்றும் தாடை பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார். அதற்குப் பிறகு சுதாகரிடம் இருந்து தப்பிக்க தன்னுடைய வீட்டின் அறைக்குள் சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தனது உறவினர்களை மொபைல் போனில் அழைக்கும்போது அனிதா கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். பின்னர் சுதாகர் அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுதாகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்துள்ளனர்.