Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. ரஷ்யா அடைந்த லாபம் எவ்வளவு தெரியுமா?… வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ரஷ்ய நாட்டிற்கு 12.4 ட்ரில்லியன் டாலர்கள் லாபம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் ஆறு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட போரால் அந்நாடு ஆக்கிரமித்த சொத்துகளின் மதிப்பை அமெரிக்க நாட்டின் பத்திரிகை ஒன்று ஆய்வு செய்திருக்கிறது. அதில், ரஷ்யா குறைந்தபட்சம் 12.4 ட்ரில்லியன் மதிப்பு கொண்ட உக்ரைன் நாட்டின் முக்கியமான ஆற்றல் மற்றும் கனிம வைய்ப்புகளை ஆக்கிரமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில் உக்ரைனில் 63% நிலக்கரி, 20% இயற்கை எரிவாயு வளம், உலோக கனிம வளத்தில் 42% 11% எண்ணெய் வளம் என்று ஆக்கிரமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |