ராமநாதபுரத்தில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக வைத்திருந்த சுறாமீன் இறக்கைகள், ஏலக்காய், கடல் அட்டை ஆகியவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தூத்துக்குடிக்கு செல்லும் சாலை வழியாக சில கடத்தல் பொருள்கள் வாகனத்தில் கடத்தி வருவதாக தூத்துக்குடி கடலோர காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கடலோர போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை அருகே உள்ள குடோன் முன்பு ஒரு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததுள்ளது. அதனை வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 450 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட சுறாமீன்களின் இறக்கைகள் இருந்துள்ளது.
இதனை அடுத்து 5 மூட்டைகளில் 250 கிலோ ஏலக்காய் இருந்துள்ளது. மேலும் 55 கிலோ கடல் அட்டைகளும் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தில் இருந்த அனைத்தையும் பறிமுதல் செய்து இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கீழக்கரையை சேர்ந்த காசிம் முகமது(50), முகமது மீரா சாகிப், சாகப்தின் சாகிப், இம்ரான் உசேன், அகமது உசேன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தல் பொருட்களை இலங்கைக்கு கடத்தி செல்வதற்கு தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த 5 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.