Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை  நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா  பரவலின்  காரணமாக இந்தியாவில் சர்வதேச அளவிலான விமான போக்குவரத்து கடந்த மார்ச்  23ஆம் தேதிமுதல் அனைத்து சர்வதேச விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இவை முன்னதாக நவம்பர் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவருகின்றன.

இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ஆம் தேதிவரை தொடரும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சர்வதேச கமர்சியல் பயணிகள் விமான சேவைக்கான தடை வரும்  அதேவேளை வந்தே பாரத் திட்டம் வழக்கம்போலத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |