Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பிகில் படத்திற்கு தடை : இன்று வழக்கின் தீர்ப்பு…..!!

பிகில்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது.

பிகில் படத்தின் கதை தன்னுடையது , என்னுடைய கதையை திருடி பிகில் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் கடந்த 17  நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் அராஜரான அட்லீ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2018 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் பிகில் பட கதையை பதிவு செய்ய இருப்பதாகவும் , மனுதாரர் அக்டோபரில் தான் பதிவு செய்தார் என்றும் சொல்லப்படாது.மேலும் விளம்பரத்திற்காகவும் , பணத்திற்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் அட்லீ தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்க்கு இயக்குனர் செல்வா தரப்பில் பணத்திற்க்கோ அல்லது விளம்பரத்திற்க்கோ வழக்கு தொடரவில்லை என்று வாதிடப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |