Categories
தேசிய செய்திகள்

“தேர்தல் பிரச்சாரம், பேனருக்கு அதிரடி தடை”….. ஆனா ஓட்டு மட்டும் கண்டிப்பாக போடணும்….. பிரதமரின் சொந்த மாநில கிராமத்தில் அதிரடி ரூல்…..!!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ராஜ் சமாதியாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கிடையாது. ஏனெனில் யாராவது தேர்தல் பிரச்சாரம் செய்தால் கிராமத்திற்கு ஆகாது என்பது அம்மக்களின் நம்பிக்கை. அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்களின் பேனர்கள் வைக்கவும், துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மொத்தம் 2000 பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் யாராவது வாக்களிக்காமல் இருந்தால் அவர்களுக்கு ரூ. 51 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் யாராவது தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கிறார்களா என்பதை கவனிப்பதற்காக தேர்தல் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே கிராம நிர்வாகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதனையடுத்து சிசிடிவி, வைபை போன்ற நவீன வசதிகளுடன் இருக்கும் அந்த கிராமத்தில் 1000 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 8-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

Categories

Tech |