அத்தியாவசிய பொருட்களில் தேவை பிரச்சைகளுக்கு கட்டுப்பாட்டு மையம் அமைக்க மத்திய அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
144 , ஊரடங்கு உத்தரவு வெளியானதை அடுத்து மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்காதோ என்ற அச்சத்தில் பொருட்களை வாங்கி குவிக்க ஆரம்பித்தனர். இதனால் மாநில மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தெரிவித்து வருவது என்னவென்றால் மக்கள் யாரும் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வந்தன.
இந்த சூழ்நிலையில்தான் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கிறதா? இல்லையா ? மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, மாவட்ட அளவில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் அமைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.