கிரீஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு ஜூன் 14-ஆம் தேதி வரை வெளிநாட்டவருக்கு தடை விதித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிரீஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 14-ஆம் தேதி வரை வெளிநாட்டவர் அந்நாட்டிற்குள் வருவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸால் கிரீஸ் நாட்டில் மொத்தம் 409,368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 20,809 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தற்போது கிரீஸ் நாட்டில் 12,899 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.