Categories
உலக செய்திகள்

“தகாத உறவு, லிவிங் டு கெதருக்கு அதிரடி தடை”….. கலாச்சார சீர்கேடை தடுப்பதற்கு விரைவில் வருகிறது சிறப்பு சட்டம்….!!!!!!

தென் கிழக்கு ஆசிய நாடு இந்தோனேஷியா. இது சுற்றுலா மற்றும் வணிக முதலீடிற்கு உகந்த நாடாக கருதப்படுகிறது. இந்த நாட்டில் கூடிய விரைவில் ஒரு அதிரடி சட்டம் இயற்றப்பட இருக்கிறது. அதாவது திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளுதல், கே, லெஸ்பியன், பாலியல் வன்கொடுமைகள், இயற்கைக்கு புறம்பான பாலியல் குற்றங்கள், லிவிங் டுகெதர் போன்ற குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இவைகளை எல்லாம் தடுக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட இருக்கிறது.

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தோனேசியாவில் பல பகுதிகளில் போராட்டங்கள் தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக சட்டம் இயற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது கூடிய விரைவில் சட்டத்தை இயற்றுவதற்கு முடிவு செய்துள்ளார்கள். இந்த சட்டம் இயற்றப்பட்டால் இந்தோனேஷியாவில் வணிகத்திற்காக முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறையும் என வணிகர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். ஏனெனில் இந்தோனேஷியாவுக்கு செல்லும் வெளிநாட்டவர்க்கும் சட்டம் பொருந்தும் என்பதால் முதலீடு செய்ய யோசிப்பார்கள் என்று வணிகர்கள் அஞ்சுகிறார்கள்.

இந்நிலையில் சட்டம் இயற்றப்பட்ட பிறகு திருமணமானவர்கள் மனைவி அல்லது கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் உறவு வைத்திருந்தால் கணவன் அல்லது மனைவி கொடுக்கும் புகாரின் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு வருட சிறை தண்டனை கொடுக்கப்படும். இதேபோன்று திருமணம் ஆகாதவர்கள்  உடலுறவு வைத்துக் கொண்டால் பெற்றோர் அளிக்கும் புகாரின் பேரில் 6 மாதம் சிறை தண்டனை அளிக்கப்படும்.

இதனையடுத்து பாலியல் வன்கொடுமை மற்றும் திருமணத்தை மீறிய உறவுகள் போன்றவற்றை தடுப்பதற்கு முஸ்லிம் வசிக்கும் பகுதியில் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. அதாவது முஸ்லிம் வசிக்கும் பகுதிகளில் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் ஆண், பெண் என்று பாலினம் பார்க்காமல் நடுரோட்டில் போலீசார் கசையடி கொடுப்பார்கள். மேலும் நாடாளுமன்றத்தில் கூடிய விரைவில் சட்டம் இயற்றப்பட இருப்பதால் பாலியல் வன்கொடுமைகள் குறையும் என்பதுதான் அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.

Categories

Tech |