சங்கிலி முனியப்பன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி வழங்காததால் வனத்துறை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் ஊராட்சி ஒபிலி ராயன் வனப்பகுதியில் சங்கிலி முனியப்பன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இக்கோவிலில் 10-க்கும் அதிகமான கிராம மக்கள் கோழி மற்றும் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருக்கும் சாமியை வழிபடகூடாது என மறுத்து கிராம மக்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து பொது மக்களுக்கும் மற்றும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதன் காரணத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.