கொரோனா தொற்று பாதிப்பு பிரித்தானியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் மேலும் ஊரடங்கு நீடிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியினை அரசு தீவிரப்படுத்தியது. இதையடுத்து பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இதனால் வருகின்ற 21-ஆம் தேதி அமலில் இருந்த ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது. ஆனால் “டெல்டா” என்றழைக்கப்படும் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸானது பிரித்தானியாவில் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது.
இதனால் பிரித்தானியாவில் நாளுக்கு நாள் 5 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. மேலும் இந்த டெல்டா வைரஸின் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் வருகின்ற 21-ஆம் தேதி ஊரடங்கு தளர்வு அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த கொரோனா தொற்று குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் வருகின்ற ஜூலை 5-ஆம் தேதி வரை ஊரடங்கானது நீட்டிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தாலும் ஊரடங்கு இரண்டு வாரத்திற்கு கட்டாயம் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த டெல்டா வைரஸ் வீட்டிற்குள்ளேயே 60% பரவும் தன்மை கொண்டிருப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. அதேசமயம் பிரதமர் அலுவலகம், வருகின்ற 21-ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்த ஆலோசனையில் இறுதியான முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.