பிப்ரவரி மாதம் என்றாலே காதலர்கள் மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிடுவார்கள். இதன் காரணம் காதலர்களுக்கான வாரம் வரும் மாதம் என்பதால்தான். வருடம் தோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு 7ஆம் தேதி முதல் ஒவ்வொரு தினமாக காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர். அவ்வகையில் பிப்ரவரி 11 ஆம் தேதி வாக்குறுதி தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த தினத்தில் தன் காதலன் அல்லது காதலியிடம் வாழ்வின் எல்லை வரை உன்னுடன் ஒற்றுமையாக வாழ்வேன் என அவர்களது கண்களை நேராகப் பார்த்து கூறி நேர்மையுடன் எப்போதும் நடப்பேன் என உங்கள் வாக்குறுதியை கொடுக்கலாம், நல்ல நண்பனாக தோழியாக வாழ்நாள் முழுவதும் துணை நிற்பேன் என்ற சத்தியத்தையும் செய்து கொடுக்கலாம், எத்தகைய கடுமையான சூழ்நிலை வந்தாலும் எனது ஆதரவை எப்போதும் உனக்கு கொடுப்பேன் என உங்கள் காதலன் அல்லது காதலிக்கு நம்பிக்கை கொடுக்கலாம். இந்த நாளில் நீங்கள் கொடுக்கும் நம்பிக்கை நீங்கள் செய்யும் சத்தியம் உங்கள் காதலை இன்னும் பலப்படுத்தும்.