அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா -ஈராக் ஆகிய இரு நாடுகளுக்கிடையே அவ நம்பிக்கை நிலவுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைய உள்ளதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏனைய நாடுகளும் கையொப்பமிட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி தெரிவித்ததாவது, நான் ஒரு விஷயத்தை கூறுகிறேன்.
அது என்னவென்றால், எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பல நடைமுறையில் மீறப்பட்டுள்ளது.எனவே வெறும் வாக்குறுதி ஒன்றுக்கும் உதவாது. இந்த முறை, நடவடிக்கை மட்டுமே வேண்டும். ஏனைய நாடுகள் செயல்படத் தொடங்கியவுடன் ஈரானும் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பைடன் தெரிவித்ததாவது, ஈரான் முதலில் முழு ஒத்துழைப்புடன் செயல்படத் தொடங்கினால் கடந்த 2018-இல் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைவிட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா மீண்டும் திரும்பும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆகையால் இரு நாடுகளுக்கிடையே அவ நம்பிக்கை நிலவுவதால், அமெரிக்கா முதலில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.