Categories
சினிமா தமிழ் சினிமா

அதர்வாவின் ”தள்ளி போகாதே”……. ‘என்ன தவம் செய்தேன்’ பாடலின் புரோமோ வெளியீடு……!!!

‘தள்ளி போகாதே’ படத்தின் புதிய பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முரளி. இவர் நடித்த திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ”தள்ளி போகாதே”. அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

மேலும், இந்த படத்தில் ஆடுகளம் நரேன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் ‘என்ன தவம் செய்தேன்’ என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=PAOJFHFgtLw&feature=emb_imp_woyt

Categories

Tech |