Categories
மாநில செய்திகள்

கணினி பயிற்றுநர்களுக்கு “பதவி உயர்வு”… தமிழக அரசு உத்தரவு..!!

அரசு பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களுக்கு உயர் பதவி அளித்து அதற்கேற்ற ஊதியம் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த 904 கணினி பயிற்றுநர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நிலைக்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாக 11 மற்றும் 12ஆம் வகுப்பில் கணிணி பாடம் எடுக்க 904 கணினி பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் வாங்கும் ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் தற்பொழுது அவர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதத்துக்கு இணையாக நிலை 1-க்கு 904 பேருக்கும் பதவி உயர்வு வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2019 பிப்ரவரி 12ஆம் தேதி முதல் இந்த பதவி உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், அன்று முதல் இன்று வரை, அவர்களின் ஊதியத்தைக் கணக்கிட்டு வழங்கப்படுவதாகவும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |