விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர் ரவீந்திர செல்வா ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக செல்வா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது நியமனத்திற்கு இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையின்போது ரவீந்திர செல்வா போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தில் குறிப்பிடப்படபட்டிருப்பதை எதிர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் கொழும்புவில் பேசிய புதிய ராணுவ தளபதி செல்வா தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதாக தெரிவித்த ஆவர், உள்நாட்டுப் போரின்போது நாட்டு மக்களை எப்படியெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் செல்வா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், குற்றச்சாட்டுகெல்லாம் கவலைப்படாமல் என் நாட்டு மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியிருக்கிறார்.