அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அந்த அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடனின் ஒத்துழைப்பு ஒரு போதும் நிரூபிக்கப்படவில்லை என்று தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள இரட்டை கோபுரம் உட்பட சில முக்கிய இடங்களில் கடந்த 2001 ஆம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் 4 பயணிகள் விமானங்களை கடத்தி அதன் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலினால் கடும் கோபமடைந்த அமெரிக்கா, அதன் படைகளை அல்கொய்தாவின் தலைவனான ஒசாமா பின்லேடனை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு தற்போது தலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் களமிறக்கியுள்ளது.
அதன் விளைவாக கடந்த 2011ம் ஆண்டு அல்கொய்தாவின் தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் மேலே குறிப்பிட்டுள்ள தாக்குதலுக்கும், அல்கொய்தாவின் தலைவரான ஒசாமா பின்லேடனுக்கும் சம்மந்தமுண்டு என்னும் கூற்று தற்போது வரை நிரூபிக்கப்படவில்லை என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.