ஆதாரம் இருப்பதால் கஷ்டடியில் வைக்க அனுமதி தர வேண்டுமென்று சிபிஐ தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது.
ஐஏன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து சிபிஐ மற்றும் சிதம்பரம் தரப்பிலான வாதங்கள் அனல் தெறிக்க நடைபெற்றன இறுதியாக சிதம்பரம் தரப்பு வக்கீல்களான அபிஷ்மன்யூ , கபில்சிபில் ஆகியோர் வாதாடிய நிலையில், மீண்டும் சிபிஐ தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது.
சட்டம் குறித்து நன்கு அறிந்த சிதம்பரத்திக்கு பதில் சொல்லாமல் சட்டத்தை எப்படி தட்டிக்கழிக்க முடியும் என்று நன்கு தெரியும் என்று கூறிய சிபிஐ தரப்பு அவருக்கு ஏதும் சலுகை அளிக்க கூடாது. ஆதாரம் இருப்பதால் ப.சிதம்பரத்தை கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் வாதாடி வருகின்றது.இதையடுத்து ப.சிதம்பரம் நீதிபதியிடம் விளக்கம் அளித்தார். அனல் பறக்கும் விவாதம் நடைபெற்ற நிலையில் வாதம் பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி இந்தவழக்கை 30 நிமிடம் கழித்து தீர்ப்பு வழங்குவததாக ஒத்திவைத்தார்.