புதுக்கோட்டை மாவட்டத்தில் சொத்து தகராறில் அண்ணனை தம்பி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொரண்டாம்பட்டி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரெங்கசாமி மற்றும் கணேசமுருகன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பழனிசாமி தனது 2 வது மகன் கனேசமுருகனுடம் வசித்து வருகிறார். அதனால் தன்னை கவனித்துக் கொள்ளும் மகனுக்கு சொத்துக்களை தருவதாக கூறியுள்ளார். இதனையறிந்த மூத்த மகன் ரெங்கசாமி சொத்துக்களை பிரித்து தரக்கோரி தந்தை மற்றும் தம்பியிடம் தகராறு செய்துள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த கணேசமுருகன் ரெங்கசாமியை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். இதுக்குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் கணேசமுருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.