Categories
தேசிய செய்திகள்

சொத்து தகராறு…. பெற்ற மகனை கொன்ற கொடூர தந்தை…. போலீஸ் விசாரணை …!!

திருப்பதியில் சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை சுத்தியால் அடித்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி மண்டலம், சின்னமுஷிடிவாட சத்யநகரில் வாழ்ந்து வருபவர் 72 வயதான போரிபதி வீரராஜு. இவர் கடற்படையில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். அதன்பின் இவர் தனது 3 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்தார். மகன் ஜலராஜு மருமகள் ஈஸ்வரி ஆகியோருடன் வீரராஜு வசித்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தந்தை வீரராஜு மகன் ஜலராஜூ இருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீரராஜும் – ஜலராஜும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஜலராஜு வீட்டின் வெளியில் வராண்டாவில் அமர்ந்திருந்தபோது, ​​அவரது தந்தை வீரராஜு பின்னால் வந்து சுத்தியலால் ஜலராஜூ தலையில் நான்கு முறை தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அதன்பின் தகவலறிந்து கோபாலபட்டணம் இன்ஸ்பெக்டர் மல்லா அப்பாராவ் மற்றும் பெந்துர்த்தி எஸ்.ஐ.க்கள் ஸ்ரீனு, ஹரிகிருஷ்ணா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விவரங்களை சேகரித்து ஜலராஜுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் கே.ஜி.எச். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜலராஜு மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் வீரராஜு மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |