மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பு பிரச்சனை காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, பெருங்குடி சிவசக்தி நகரை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரின் மனைவி காத்தூன் பிவி(55). தனது பூர்வீக இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். இது தொடர்பாக அவரது சகோதரர் மற்றும் சகோதரிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை உறவினர்கள் அவரை அரிவாள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதற்கடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து காத்தூன் பிவியின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை விசாரணை செய்து வருகின்றனர்.